search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை நிறுத்த போராட்டம்"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக தெரிவித்தது.

    இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.



    இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

    சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். #JactoGeo
    தலைமை செயலர் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. #JactoGeo

    திண்டுக்கல்:

    ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பணிக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் ரத்து என தலைமை செயலர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டிக்கிறோம். 2017 முதல் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். 2 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அவமானப்படுத்துகின்றனர். நீதிமன்றம் மூலம் போராட்டத்தை முடக்க நினைக்கின்றனர். ஆனால் எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.

    எல்.கே.ஜி. -யு.கே.ஜி. கல்வியை அரசு பள்ளிகளில் தொடங்க வலியுறுத்தினோம். மாறாக அங்கன்வாடி மையங்களில் தொடங்கி ஆங்கில வழிக்கல்வியை கொடுப்பதாக கூறுகின்றனர்.

    இது தமிழ் வழி கல்விக்கு விரோதமான செயல். 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் தொடக்க கல்வித்துறைக்கு மூடுவிழா காண நினைப்பது கண்டிக்கத்தக்கது.

    இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி.-யு.கே.ஜி. வகுப்பிற்கு பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 800 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#DoctorsProtest
    கோவை:

    அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனையடுத்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 500 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 250 டாக்டர்களில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 100 டாக்டர்கள் இன்று போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை.

    இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனவே கூட்டத்தை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதே போல மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 20 டாக்டர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கும் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 80 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 160-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகிறனர். இங்கு புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    டாக்டர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் 300 பேர் போராட்டம் காரணமாக இன்று பணிக்கு வரவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DoctorsProtest
    அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி டாக்டர், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவரச சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் பல பிரிவுகள் உள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் காவலாளியாக ராஜா (வயது 35). என்பவர் நேற்று இரவு இருந்தார்.

    இரவு 11 மணியளவில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்ற வாலிபர் குடிபோதையில் ஆஸ்பத்திரியின் கேட்டில் நின்று கொண்டு காவலாளியிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ராஜா கதவை திறக்காமல் இருந்தார்.

    அப்போது ஆத்திரம் ராமச்சந்திரன் கேட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார். பின்பு பிரசவ வார்டு அருகே சென்ற அவர் அங்கு இருந்த கதவை உடைத்து ரகளை செய்தார். அப்போது அந்த அறையில் இருந்த நர்சுகள் கிரேசி, வசந்தி, மலர்விழி மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்த வாலிபரிடம் ஏன் இங்கு வந்து ரகளை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அவர்களையும் ராமச் சந்திரன் ஆபாசமாக பேசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு இருந்த நர்சுகள் அலறிஅடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் இருந்த புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறினர். இதை அறிந்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்பு அவர் சிறிது நேரம் கழித்து தனது அண்ணன் இளையபெருமாள் (29), உறவினர் ஸ்ரீகாந்த் (32) ஆகியோருடன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்பு அவர்கள் அங்கிருந்த காவலாளி ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து காவலாளி ராஜா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு வழக்கம் போல் வந்தனர். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் காவலாளியை தாக்கி விட்டு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென்று பணி செய்யாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    7 டாக்டர்கள், 18 நர்சுகள், 30 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பட்டாபிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி கூறினார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.

    அதனைதொடர்ந்து போராட்டம் நடத்திய டாக்டர்கள், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளி ராஜாவை தாக்கிய ராமச்சந்திரன், இளையபெருமாள், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதலில் காயம் அடைந்த காவலாளி ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி:
                 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் 3 நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    ரிக் உரிமையாளர் சங்கத்தினர் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிர்ணயிக்கும் முறை மத்திய அரசு தனியாருக்கு முதலில் வழங்கியது. அந்த நடைமுறை மாற்றி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை வழங்கியது. இந்த நடைமுறையால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வருகிறது. 

    தருமபுரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்டரிக் வண்டி உரிமையாளர்கள் உள்ளனர். அவர்கள் ரிக் வண்டிகளை வடமாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும்பணியை செய்து வந்தனர். தற்போது  உயர்ந்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து 3 அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை தருமபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று முதல் தொடங்கியுள்ளோம். 

    இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் வட மாநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள், மற்றும் போர்வெல் போடும் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    நாள்தோறும் டீசல் விலை உயர்ந்து வருவதால் நாங்கள் போர்வெல் போடுவதற்கும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் சரியான விலையை நிர்ணயிக்க முடியாமல் திணறி வருகிறோம். எனவே மீனவர்களுக்கு  மோட்டார் படகிற்கு பெட் ரோல் மற்றும் டீசலுக்காக  மானியம் வழங்குவதுபோல் ரிக்  வண்டி களுக்கென்று டீசலுக்காக மானியம் வழங் கினால் நாங்கள் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் போடுவது போன்ற பணிகளை செய்து கொடுப்போம். எனவே, மத்திய, மாநில அரசுகள் ரிக் வண்டிகளுக்கான டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    சென்னை

    வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் தங்களது ஊதியத்தை மாற்றி அமைக்க கோரி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பண மதிப்பு நீக்கத்தின் போது 2 மாதம் நாள் முழுவதும் இரவு-பகலாக உழைத்தனர். 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கியதும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துபவர்களும் இவர்கள் தான். ஆனால் அவர்களின் சம்பளம் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளைவிட குறைவாக உள்ளது.

    வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள உயர்வு கடந்த 2017-ம் வருடம் நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தவேண்டியது.

    ஊதிய உயர்வுக்கான கோரிக்கை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் நடக்கவில்லை.

    பேச்சுவார்த்தையின்போது இந்தியன் வங்கிகள் சம்மேளனம் வழக்கத்திற்கு மாறாக இளநிலை மற்றும் நடுநிலை அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் 2 சதவீதம் சம்பள உயர்வே சாத்தியம் எனவும் கூறினார்கள்.

    இதனை கண்டித்து உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 9 சங்கங்களின் கூட்டமைப்பான யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ஊதிய உயர்வு ஒப்பந்தம் எப்போதும் போல 7-வது நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார் 
    ×